ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் திருப்பள்ளியெழுச்சி மன்றம்


ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் திருப்பள்ளியெழுச்சி மன்றம் ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகளின் அருள் நெறி கருத்துக்களைப் பரப்பும் உயரிய நோக்குடன் செயல்பட்டு வருகிறது.

ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் திருப்பள்ளியெழுச்சி மன்றம் 2000-ம் ஆண்டு ஜூன் மாதம் திருவான்மியூர் பாம்பன் சுவாமிகள் ஜீவசமாதியில் சித்தாந்த செல்வர் அருநூற்புலமை ஆன்றோர் பேராசிரியர் டாக்டர் ப.இராமன் அவர்கள் முன்னிலையில் குகஸ்ரீ முருகன் அடிமை திரு.தா.சந்திரசேகரன் இ.ஆ.ப. தமிழ்நாடு மாநில தலைமை தேர்தல் ஆணையர் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது.

திருப்பள்ளியெழுச்சி மன்றத்தை திருமதி வ.மரகதவல்லி எம்.எஸ்.சி. எம்.ஏட். டி.எஸ்.எம். அவர்கள் மிக சிறப்பானமுறையில்நடத்தி வருகிறார். ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகளின் அருள் நெறி கருத்துக்களைப் பரப்புகிற சொற்பொழிவுகள் இசை நிகழ்ச்சிகள் சென்னை திருவான்மியூரில் உள்ள சுவாமிகளின் திருத்தலத்தில் மன்றத்தின் மூலமாக தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றது. இம்மன்றத்தின் ஆன்மிகம் மற்றும் கல்விச் செயல்பாடுகள் விரைவில் வெளியிடப்படும்.


Tuesday, 15 January 2013

இனிய வாழ்விற்கு வழி


மெய்யடியார்கள் வாழ்க்கையில் பல துயரங்களை கண்டு அஞ்சுகின்றீர்களா கவலையே வேண்டாம்.
இதோ சுவாமிகள் அருளிய பதிகங்களும் பாடல்களும். இவற்றை நாள்தோறும் நெஞ்சுருகி பாடினால் துயரங்கள் உங்களை விட்டு ஓடிவிடும் என்பது திண்ணம்.
என் பாட்டை பாடுபவர்களுக்கு நலம் நல்காய் என்பது சுவாமிகள் வாக்கியமாகும்.
1.எலும்பு முறிவு சூனியம் பிசாசு தொல்லை மற்றும்
உடல் உபாதைகளில் இருந்து வெளியே வர
:சண்முககவசம்
2.பகைவர்கள் இல்லாத வாழ்க்கை வேண்டுமா:பகை கடிதல்
3.குருவின் அருளாசி பெற:ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் சோடச நாமார்ச்சனை
Read More >>

0 comments:

Post a Comment