ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் திருப்பள்ளியெழுச்சி மன்றம்


ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் திருப்பள்ளியெழுச்சி மன்றம் ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகளின் அருள் நெறி கருத்துக்களைப் பரப்பும் உயரிய நோக்குடன் செயல்பட்டு வருகிறது.

ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் திருப்பள்ளியெழுச்சி மன்றம் 2000-ம் ஆண்டு ஜூன் மாதம் திருவான்மியூர் பாம்பன் சுவாமிகள் ஜீவசமாதியில் சித்தாந்த செல்வர் அருநூற்புலமை ஆன்றோர் பேராசிரியர் டாக்டர் ப.இராமன் அவர்கள் முன்னிலையில் குகஸ்ரீ முருகன் அடிமை திரு.தா.சந்திரசேகரன் இ.ஆ.ப. தமிழ்நாடு மாநில தலைமை தேர்தல் ஆணையர் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது.

திருப்பள்ளியெழுச்சி மன்றத்தை திருமதி வ.மரகதவல்லி எம்.எஸ்.சி. எம்.ஏட். டி.எஸ்.எம். அவர்கள் மிக சிறப்பானமுறையில்நடத்தி வருகிறார். ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகளின் அருள் நெறி கருத்துக்களைப் பரப்புகிற சொற்பொழிவுகள் இசை நிகழ்ச்சிகள் சென்னை திருவான்மியூரில் உள்ள சுவாமிகளின் திருத்தலத்தில் மன்றத்தின் மூலமாக தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றது. இம்மன்றத்தின் ஆன்மிகம் மற்றும் கல்விச் செயல்பாடுகள் விரைவில் வெளியிடப்படும்.


Tuesday, 15 January 2013

சுவாமிகள் அருளியவை

Dhanapalசுவாமிகள் அருளிய பாடல்களை அடியார்கள் எளிதில் புரிந்து கொள்ள வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக தன்னையே தியாகம் செய்த சித்தாந்தச் செல்வர். அருநூற்புலமை ஆன்றோர் பேராசிரியர் டாக்டர் ப.இராமன் எம்.ஏ.பிச்.டி.அவர்களின் எளிய உரையுடன் கூடிய நூல்களை அவர்களுடைய அடிச்சுவட்டில் இருக்கும் சிவத்தமிழ் குகமணி தெ.தனபால் பணிவுடன் மெய்யடியார்களுக்கு சமர்ப்பிக்கின்றேன். டாக்டர் ப.இராமன் அவர்கள் எழுதிய உரைநூல்களை இந்த இணையதளத்தில் வெளியிடுவதை அடியேன் பல பிறவிகளில் செய்த பூகைளின் பலன் என்று கருதி அவர்களுடைய ஆசியை வேண்டி என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
Read More >>

0 comments:

Post a Comment