ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் திருப்பள்ளியெழுச்சி மன்றம்


ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் திருப்பள்ளியெழுச்சி மன்றம் ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகளின் அருள் நெறி கருத்துக்களைப் பரப்பும் உயரிய நோக்குடன் செயல்பட்டு வருகிறது.

ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் திருப்பள்ளியெழுச்சி மன்றம் 2000-ம் ஆண்டு ஜூன் மாதம் திருவான்மியூர் பாம்பன் சுவாமிகள் ஜீவசமாதியில் சித்தாந்த செல்வர் அருநூற்புலமை ஆன்றோர் பேராசிரியர் டாக்டர் ப.இராமன் அவர்கள் முன்னிலையில் குகஸ்ரீ முருகன் அடிமை திரு.தா.சந்திரசேகரன் இ.ஆ.ப. தமிழ்நாடு மாநில தலைமை தேர்தல் ஆணையர் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது.

திருப்பள்ளியெழுச்சி மன்றத்தை திருமதி வ.மரகதவல்லி எம்.எஸ்.சி. எம்.ஏட். டி.எஸ்.எம். அவர்கள் மிக சிறப்பானமுறையில்நடத்தி வருகிறார். ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகளின் அருள் நெறி கருத்துக்களைப் பரப்புகிற சொற்பொழிவுகள் இசை நிகழ்ச்சிகள் சென்னை திருவான்மியூரில் உள்ள சுவாமிகளின் திருத்தலத்தில் மன்றத்தின் மூலமாக தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றது. இம்மன்றத்தின் ஆன்மிகம் மற்றும் கல்விச் செயல்பாடுகள் விரைவில் வெளியிடப்படும்.


Tuesday, 15 January 2013

சுவாமிகள் பாடல்கள்

கேளுங்கள் கேட்டுக்கொண்டே இருங்கள்

Kanthakotta MummanikkovaiKumbakonam GajendranS.P.Ramu Saratha

Read More >>

0 comments:

Post a Comment